Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

எங்க வீட்டுக் காற்று!

மொட்டை மாடி
தண்ணீர் தொட்டியில்
குளித்த காற்று
தென்னங்கீற்றில்
தலை துவட்டி
அங்கு கொடியில் உலர்ந்த
ஒவ்வொரு துணியையும்
உதறி அணிந்து
ஒத்திகை பார்த்து
முடிவில்
அம்மணமாகவே
அகன்றது ...