Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).
காயத்ரி மந்திரம்!
என் பெற்றோர்கள்
நிறைய செலவழித்து
நடத்தினார்கள் எனக்கு
உபநயனம் ...
பல வருடங்களாக
அந்தப் பூணூலை
சுவற்று ஆணிதான்
அணிந்து வருகிறது ...
சொல்லப் போனால்
அன்று வாத்தியார்
காயத்ரி மந்திரத்தை
அந்த ஆணையின்
காதிலேயே
ஓதியிருக்கலாம் ...