Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

கிருஷ்ண ஜெயந்தி!

பூஜை மாடம் வரை
கைத் தடம் வைத்து
மாக் கோலம் போட்ட
குழந்தைப் பார்த்து
தாய் கேட்டாள்
"பாதம் தானே
போடச் சொன்னேன்?" என்று

"தவழும் கிருஷ்ணனுக்கு
கைதானே கால்" என்று
சொல்லிச் சிரித்தது குழந்தை!