பிரமிப்பு
புதுக் கவிதைகளையும்
ஹை கூ கவிதைகளையும்
படித்து ரசித்து ஒரு கணம்
புத்தகத்தை மூடிவிட்டு
மறுபடியும் திறந்தேன் ...
எழிலான மரபுக் கவிதைகள்
தென்பட்டன ...
எனக்குள் ஒரு பிரமை ...
சல்வாரும் ஜீன்ஸும் அணிந்த
கன்னிப் பெண்கள் உடை மாற்றும்
அறைக்குச் சென்று
பாவாடை தாவணியுடன்
வெளிவந்ததது போல் ...