Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

முகப் புத்தகம்!

முன்பின் தெரியாத ஒருவர்
எனக்கு நட்பு வேண்டுகோள்
அனுப்பியிருந்தார்

அவர் என் நண்பரின் நண்பரோ?
இல்லை என்னை அறிந்தவரோ?

ஒன்றும் புலப்படவில்லை
சரி என்று விடை கொடுத்தேன்

மறுநாள் அவர்
என்னை நட்பிலிருந்து
துண்டித்து விட்டார்

ஒருவேளை அவரும்
நான் அன்னியன் என்பதை
உணர்ந்திருக்கக்கூடும்

இப்பொழுதெல்லாம்
நமக்குத் தெரியாதவர்கூட
நம்மிடம் பழம் காய்
போடுகிறார்கள் ...