வரதன்
நோய் இல்லாதபோதும்
இருப்பதாய்க் கூறும்
ஹைபோகான்றியாக்
நோயாளிகளுக்கு
கொடுக்கும் மருந்து
ப்ளசீபோ என்ற
பொய் மாத்திரை
கற்பனை வியாதிக்கு
கற்பனை மருந்து
நவீன மருத்துவமாம் இது ...
ஆனால்
ஐந்து வயதில்
நான் என் கற்பனை நண்பன்
வரதனுடன் விளையாட மட்டும்
ஏனோ அனுமதிக்கவில்லை ...