தேர்ந்தெடுத்தல்!
நிபுணர் ஒருவர்
தொலை காட்சியில்
கூறுகிறார் ...
"கடையில் நீங்கள்
வாழ்வின் தேவைக்குறிய
முக்கிய சாமானைத்
தேர்ந்தெடுக்கும் போது
அதன் விமர்சனத்தையும்
கவர்ச்சி அமைப்பையுமே
நம்பிவிடாமல் அதிலுள்ள
பொருட்களை ஆராய்ந்து
பணித்தன்மையை கணித்து
கால உத்திரவாதம் எப்படி
என்றெல்லாம் கவனித்து
எதற்கும் நாலு பேரைக் கேட்டு
முடிவுசெய்யுங்கள் ..." என்று
அப்படிப் பார்த்தால்
முக்கால்வாசித் திருமணங்கள்
நடந்திருகாது!