குணாதிசயங்கள்!
டாக்டர் இன்னும் வரவில்லை
காத்திருந்த நேரத்தில்
சுற்றி இருந்தோர்
தன்னையே அறியாமல்
ஏதேதோ செய்தபடி
அமர்ந்திருந்தனர்
ஒரு சிறுவன் நகத்தைக்
கடித்துக் கொண்டிருந்தான்
பெரியவர் ஒருவர் தாடியை
வருடிக் கொண்டிருந்தார்
பெண்ணொருத்தி கழுத்தில்
தொங்கிய சங்கிலியால்
மோரைக் கிடைந்தாள்
வயதானவர் ஒருவர் கால்
எங்கோ ஒலித்த இசைக்கு
தாளம் போட்டது
நேரம் செல்வதில்
தெரிகிறது அவரவர்
குணாதிசயங்கள்
என்னையே அறியாமல்
புருவத்தைத் திருகிக்
கொண்டிருந்ததை
உடனே நிறுத்தினேன் ...