நிறம்
விஞ்ஞானம் நிரூபிக்கின்றது
இயற்கையின் ஏழு வண்ணங்களை
சக்கரமாய்ச் சுழற்றினால்
அவற்றின் மொத்த நிறம்
வெள்ளை என்று ...
வெள்ளை
நிறம் அனைத்தும் கொண்டது
கருப்பு
நிறமே இல்லாதது
ஆக ...
வெள்ளை மனிதன் ஏன்
தன்னை நிறமற்றவன் எனப்
பேசுகிறான்?
கருப்பில் சாயம் பூசி
ஏசுகிறான்?