Oomai Penne / ஊமைப் பெண்ணே
வழியறியாதொரு வாலிபன் என் விழிதனையே தொடர்ந்தான்
மொழிதெரியாமல் மௌனமாய் என் முகத்தினையே அளந்தான்
ஓசை இல்லாப் பாடலோ ஊமை நெஞ்சின் காதலோ
உண்மை என்ன சொல்லு தோழி
பிறை நிலவாய் நீ வானிலே தினம் தேய்ந்திடவே கண்டேன்
வரையறியாதொரு சூனியம் உன்னை சூழ்ந்திடவே கண்டேன்
ஊமைப் பெண்ணே நீயும் யாரை எண்ணி எண்ணித் தேய்கிறாய்
உன்னைப்போல் நானும் ஒருவன் எண்ணித் தேய்ந்தேன்
எண்ணித் தேய்ந்தேன் நான் எண்ணம் ஓய்ந்தேன்
இருவிழி ஓரத்திலே ஈரம் தோய்ந்தேன்
கனவில் தோன்றும் காட்சிகள் காண விழிகள் தேவையுண்டோ
விழிகள் பேசும் வார்த்தைகள் சொல்ல மொழிகள் தேவையுண்டோ
செவிகள் கேளா ஓசையோ நெஞ்சம் கேட்கும் ஆசையோ
இதில் நியாயம் என்ன உண்டு என்றுதான் சொல்லு தோழி
முழு நிலவாய் நீ வானிலே முகம் விரித்திடவே கண்டேன்
எழுபதினாயிரம் தாரகை உன் சிரிப்பினிலே கண்டேன்
ஊமைப் பெண்ணே நீ யாரைக் கண்டு நாணி நிற்கிறாய்
உன்னைப்போல் நானும் ஒருவன் கண்டு நின்றேன்
கண்டு நின்றேன் நான் காதல் என்றேன்
கள்ளினை உண்டதுபோல் போதை கொண்டேன்
ஊமைப் பெண்ணே ஊமைப் பெண்ணே
ஊமைப் பெண்ணே ஊமைப் பெண்ணே