Ore Galatta / ஒரே கலாட்டா
ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால் காதல் அன்பு – அது
ஒண்ணுக்கு மூணாய்ப் போய்விட்டாலே வம்பு
கண்ணும் கண்ணும் சேர்ந்தால் காதல் இன்பம் – அந்தக்
கண்ணில் சோடா புட்டி வந்தால் துன்பம்
மானே மயிலே தேனே குயிலே
மஞ்சள் முகமே கொஞ்சும் சுகமே – அட
மானே மயிலே தேனே குயிலே
மஞ்சள் முகமே கொஞ்சும் சுகமே
ஒரே கலாட்டா ஒரே கலாட்டா
ஒரே கலாட்டா ஒரே கலாட்டா
ஊரே கலாட்டா
சைக்கிள் இல்ல மோட்டார் பைக்கும் இல்ல
சைட் அடிக்க தைரியமும் இல்ல
வாலிபம வீணாப் போகுதே ஐயையோ
ஜோலி இல்ல வேலை ஒண்ணும் இல்ல
ஜோபுக்குள்ள பைசா ஏதும் இல்ல
காலி பையினா காலிப் பையனா ஐயையோ
ராவும் பகலும் தண்ணி போடும் நைனா – உன்
ரத்தம் எல்லாம் விஸ்கி பிராந்தி ஒயினா
உளறிக் குளறிப் பேச்சுப் பேசும் நைனா – உன்
ஓட்டை வாயைப் பூட்ட வேணும் நைனா
விஸ்கி கடையைப் மூடிட்டான்னா
விசுக்கி விசுக்கி அழுவான் நைனா – அட
விஸ்கி கடையைப் மூடிட்டான்னா
விசுக்கி விசுக்கி அழுவான் நைனா
ஒரே கலாட்டா ஒரே கலாட்டா
ஒரே கலாட்டா ஒரே கலாட்டா
ஊரே கலாட்டா
ரேஷன் கார்டு இல்லாட்டா ரோடுக்கு ரோடு கலாட்டா
மாசச் சம்பளம் வராட்டா வீட்டுக்கு வீடு கலாட்டா
ஹே ஹே ஹே – ஹே ஹே ஹே ஜாக்கிரதே
லஞ்சம் பேட்டா தராட்டா நடக்கிற காரியம் கலாட்டா
மெட்ராஸ் பாம்பே கல்கத்தா ஊருக்கு ஊரு கலாட்டா
ஹே ஹே ஹே – ஹே ஹே ஹே ஜாக்கிரதே
ஊசி கண்ணுலே ஒட்டகம் கூட நுழையும் – ஆனால்
சொர்க்கம் போக இவனால் எப்படி முடியும்
கத்தை கத்தையாக நோட்டை வாங்கி – இவன்
வைக்கிறதெல்லாம் சுவிட்சர்லாந்து வங்கி
கஞ்சனோ கஞ்சன் லஞ்சமோ லஞ்சம்
சில்லறை புத்தி சேர்க்குது வட்டி – ஹிஹி
கஞ்சனோ கஞ்சன் லஞ்சமோ லஞ்சம்
சில்லறை புத்தி சேர்க்குது வட்டி
ஒரே கலாட்டா ஒரே கலாட்டா
ஒரே கலாட்டா ஒரே கலாட்டா
ஊரே கலாட்டா