Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

Oru Ilamai / ஒரு இளமை

ஆண்:

ஒரு இளமை நம்மைத் தட்டி அழைக்கிறது
ஒரு இனிமை நம்மைக் கட்டி அணைக்கிறது
அது இயற்கை வந்த வழி
அது இருவர் சொந்த மொழி
அதில் பலவித ரகசிய விருந்துகள் இருக்குமடி

கன்னி அவள் கன்னம் மெல்ல
செம்மை கொள்ளச் செய்தால் என்ன
பெண்மை என்ற மென்மை கொண்ட
தன்மை தன்னைக் கொய்தால் என்ன

கால் அஞ்சும் காலம் அது
கை எட்டும் நேரம் இது
மனம் ஆறும் வழியுமுண்டு
அதில் நாலும் புரிவதுண்டு

பெண்:

ஒரு புதுமை நம்மைத் தொட்டு நகைக்கிறது
ஒரு தனிமை நம்மைச் சுட்டு வதைக்கிறது
அங்கு பருவம் சிரிக்கிறது
பல உருவம் நடிக்கிறது
ஒரு அனுபவப் பறவையும் சிறகினை விரிக்கிறது

தீண்டும் இன்பம் வேண்டும் என்று
மீண்டும் மீண்டும் வேண்டும் நெஞ்சம்
போதும் என்ற போதும் அங்கே
வேகும் உள்ளம் வேகம் கொள்ளும்

ஒரு பக்கம் சொர்கமுண்டு
மறு பக்கம் வெட்கமுண்டு
புது மயக்கம் பிறக்கிறது
சிறு தயக்கம் தடுக்கிறது

ஆண்:

ஒரு இளமை நம்மைத் தட்டி அழைக்கிறது
ஒரு இனிமை நம்மைக் கட்டி அணைக்கிறது
அது இரவில் பிறக்குமடி
அந்த நிலவில் பறக்குமடி
அதில் பலவித அதிசயக் கதவுகள் திறக்குமடி