Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

Pei Pisasu / பேய் பிசாசு

ஆண்:

கும் இருட்டிலே ஆந்தை கண் உருட்டுதே
பின் புறத்திலே ஒரு பேய் தொரத்துதே

பெண்:

சருகு மேலே சாரைப்பாம்பு சலசலக்குதே
சக்தி போயி தெம்பு போயி வெலவெலக்குதே
உடம்பு வெலவெலக்குதே

ஆண்:

ஆவி ரூபமா ஆறு கண்ணு ரெண்டு மூக்கு வெச்ச பூதமா

பெண்:

ஆவி ரூபமா ஆறு கண்ணு ரெண்டு மூக்கு வெச்ச பூதமா

கோரஸ்:

கும் இருட்டிலே ஆந்தை கண் உருட்டுதே
பின் புறத்திலே ஒரு பேய் தொரத்துதே

ஆண்:

வௌவாலு பறக்குது தேவாங்கு மொறைக்குது
கபால மாலை போட்ட வேதாளம் சிரிக்குது
ஓநாயி கத்துது உடும்பு தொத்துது டோய்
பல்லெல்லாம் மாத்தி மாத்தி டைப் அடிக்குது

பெண்:

குட்டி குட்டி குட்டி குட்டி குட்டிச் சாத்தானே
உத்து உத்து உத்து உத்து உத்துப் பார்த்தானே

ஆண்:

குட்டிச் சாத்தானே உடமாட்டானே
பூச்சாண்டி காட்டுவானே

பெண்:

கும் இருட்டிலே ஆந்தை கண் உருட்டுதே
பின் புறத்திலே ஒரு பேய் தொரத்துதே

கொள்ளிவாய் பிசாசு செய்யுதே தமாசு
நெஞ்செல்லாம் வெடிக்குதடி தீபாவளி பட்டாசு
ராக்கோழி கூவுது பச்சோந்தி தாவுது டோய்
ராஜாளி கழுகுக் கூட்டம் ரவுண்டடிக்குது

ஆண்:

அக்காடு போயி வந்த எலும்புக் கூடுமே
முக்காடு போட்டுக்கிட்டு ஆட்டம் போடுதே

பெண்:

குடுகுடுப்பாண்டி மையை வெச்சாண்டி
சவண்டிக் கொத்தன் ஒத்தன் கையை வெச்சாண்டி
கும் இருட்டிலே ஆந்தை கண் உருட்டுதே
பின் புறத்திலே ஒரு பேய் தொரத்துதே

ஆண்:

சோளக்கொல்லை பொம்மை கூட பயத்தைக் கெளப்புது
சுவத்துக் கோழி சத்தம் போட்டு வவுத்தைக் கலக்குது
ரொம்ப வவுத்தைக் கலக்குது

பெண்:

ஆவி ரூபமா ஆறு கண்ணு ரெண்டு மூக்கு வெச்ச பூதமா

ஆண்:

ஆவி ரூபமா ஆறு கண்ணு ரெண்டு மூக்கு வெச்ச பூதமா

கோரஸ்:

கும் இருட்டிலே ஆந்தை கண் உருட்டுதே
பின் புறத்திலே ஒரு பேய் தொரத்துதே