Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

Thalaiyai Valikkudhu / தலையை வலிக்குது

தலையை வலிக்குது அம்மம்மா
முதுகு வலிக்குது அப்பப்பா
ஒத்தடம் வைக்க ஒர்த்தரும் இல்லை
சத்திரம் எல்லாம் சாமிகள் தொல்லை

தலையை வலிக்குது முதுகு வலிக்குது
பழைய வழியெல்லாம் சேர்ந்து வலிக்குது
பல்லு வலிக்குது சொல்ல வலிக்குது
பட்டினி பசியும் உள்ளே வலிக்குது

பொடலி வலிக்குது அய்யய்யோ
கொடலும் வலிக்குது அச்சச்சோ
பத்தியம் பார்க்க வைத்தியர் இல்ல
மத்தள சத்தம் கேட்குது உள்ள

பொடலி வலிக்குது கொடலும் வலிக்குது
புதிய வலியெல்லாம் சேர்ந்து வலிக்குது
மண்டை வெடிக்குது தொண்டை கடுக்குது
ரெண்டுக்கு நாலா பெண்டை எடுக்குது

இப்படி படுத்தா இடுப்பு வலிக்குது
அப்படி பொறண்டா எரிச்சல் எடுக்குது
குப்புறப் படுத்தா நிம்மதி இல்லை
தொப்பை தொந்தியும் கொடுக்குது தொல்லை

மூக்கு அரிக்குது முதுகு அரிக்குது
மூஞ்சி முகமெல்லாம் வேர்த்து அரிக்குது
சொரிய சொரியத்தான் சொர்க்கம் தெரியுது
சொரிஞ்ச இடமெல்லாம் இப்போ எரியுது