Tholai Dhoorathile / தொலை தூரத்திலே
தொலை தூரத்திலே ஒரு நிலவு என்னைத்
தொடர்ந்தே வருகிறது
அலை வேகத்திலே ஒரு படகு திசை
அறியாதலைகிறது
மனிதன் நானும் இங்கே ஒரு
மங்கை நாடுகின்றேன்
தனிமை என்ற பாடல் வெற்றுத்
துணையாய் நிற்கக் கண்டேன் (தொலை தூரத்திலே ... )
என்னது அன்பை அவளும்
ஏற்கவே மறுத்து விட்டால்
என் ஆவியும் உன்னைப் போலே
அந்தரம் சுற்றும் நிலவே
அந்தரம் சுற்றும் நிலவே
காதலா சொல்லு மனசே
காரணம் என்ன மனசே
வேதனை சோதனைகள்
வீழ்ந்திடும் சொல்லு மனசே
வீழ்ந்திடும் சொல்லு மனசே (தொலை தூரத்திலே ...)