Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

Un Punnagai / உன் புன்னகை

உன் புன்னகை உன் பற்கள்
உன் உதடுகள் உன் சொற்கள்
என் நெஞ்சமே உன் தஞ்சமே
நான் உன்னைக் காதலிக்கிறேன்

உன் அறிவை நான் மதிக்கிறேன்
உன் அழகை நான் ரசிக்கிறேன்
இரவும் பகலும் நினைக்கிறேன்
கனவில் உன்னை அணைக்கிறேன்
இனிக்கிறேன் களிக்கிறேன்
என்னை உனக்கு அளிக்கிறேன்

ஜாதகங்கள் வேண்டாம் வேண்டாம்
ஜோதிடங்கள் வேண்டாம் வேண்டாம்
தக்ஷணைகள் வேண்டாம் வேண்டாம்
பிரச்சனைகள் வேண்டாம் வேண்டாம்
கன்னியர்கள் அன்னியர்கள் ஆக வேண்டாம்
வாலிபங்கள் வாணிபங்கள் ஆக வேண்டாம் (உன் புன்னகை ... )

நீ ஒரு கவிதை என்றால்
நான் அதைப் படிக்க வேண்டும்
நீ ஒரு பொய்கை என்றால்
அங்கு நான் குளிக்க வேண்டும்
நீ ஒரு பறவை என்றால்
விண்ணை நான் விரிக்க வேண்டும்
நீ ஒரு பாதை என்றால்
பயணங்கள் பிறக்க வேண்டும்

அறிமுகங்கள் வேண்டும் வேண்டும்
அனுபவங்கள் வேண்டும் வேண்டும்
அன்பு நெஞ்சம் வேண்டும் வேண்டும்
ஆசை கொஞ்சம் வேண்டும் வேண்டும்
ஆடவர்கள் பாடகர்கள் ஆக வேண்டும்
பாவையர்கள் பக்கம் வந்தே ஆட வேண்டும் (உன் புன்னகை ... )